அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது!

 

District Secretariat - Batticaloa-NEWS


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தொலைநோக்குடனான வழிகாட்டல் மற்றும் செம்மையான தலைமைத்துவத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் 2025/2026-ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் விருது விழாவில் மூன்றாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில், மாவட்டச் செயலகத்தின் சார்பில் இந்த உயரிய அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

பொதுச் சேவையில் உற்பத்தித்திறனையும் சிறப்பையும் மேம்படுத்துவதற்காக அயராது உழைத்த பணியாளர்கள் மற்றும் உற்பத்தித்திறன் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் கூட்டு முயற்சியின் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

இந்தத் தேசிய விருது, எமக்கு மிகுந்த கௌரவத்தையும் பெருமிதத்தையும் தருகிறது. பொதுமக்களுக்குச் வேகமான, தரமான சேவையை வழங்கி, அரசு நிர்வாகத்தில் உற்பத்தித்திறனை உயர்த்த எமது குழுவினர் காட்டிய அர்ப்பணிப்பிற்கு கிடைத்த உயரிய அங்கீகாரம் இதுவாகும்.