இலங்கை சமாதான நீதவான்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக்கூட்டம் கடந்த (01) ஆம் திகதி ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இதன்போது புதிய தலைவராகச் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சம்பத் ரணுக்போத அவர்கள் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்துடன் தெரிவு செய்யப்பட்டார்.
புதிய தலைவர் சம்பத் ரணுக்போத அவர்கள் கொழும்பு சாந்த பீற்றர் கல்லூரியின் கீர்த்திமிக்க பழைய மாணவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமாவார்.
உப தலைவராக ஜெயசிங்க பண்டார, செயலாளராக நயிபல் டீ.லயிசி, பொருளாளராக ருவன் அஹவ்திகும, பிரதித் தலைவர்களாக கயான் விதானகே, பெருமாள் விஸ்வநாதன் மற்றும் முரளிதரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், அனுசரணனையாளர்களாக சேனக ஜெயதிலக, பிரிகேடியர் ஜெரி அல்விஸ், சட்டத்தரணி ஸபுருதீன், கேமிலஸ், ஆண்டன் கந்தையா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.







