கிழக்கு மாகாண மக்கள் தீப த்திருநாளை திருநாளை கொண்டாட உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்










வரதன், 

 மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் தீபாவளி பண்டிகையை  கொண்டாடும் வகையில் பொதுமக்கள்  தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களையும்   தீபத்திருநாளுக்கு வேண்டிய  புத்தாடைகளையும்  மங்களப் பொருட்களை நகருக்கு வந்து கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது

 அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைய பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து வரும் பொது மக்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது

 மாவட்டத்தில் கடந்த இரவு இன்று காலை தொடர்ச்சியாக மழை பெய்து வந்த போதும் இன்று நண்பகள் வேலை வானிலை சீராக உள்ளதால் மக்கள் மிகவும் உற்சாகத்துடன் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வதை  காணக்கூடியதாக உள்ளது