கிழக்கு மாகாணத்தில் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் யானை மனித மோதலை கட்டுப்படுத்த விசேட செயல் திட்டம் முன்னெடுப்பு












 வரதன்,

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின் தங்கிய எல்லை பிரதேசங்களில் நிலவும் காட்டு யானை தாக்கத்தினை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் விசேட செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது இதேவேளை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் காட்டு யானை தாக்கத்திற்கு உள்ளாகின்ற மன்முனை மேற்கே பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட
கிராமங்களில் யானை மனித மோதலை தடுப்பதற்கு வவுணதீவு - கற்பானை பிரதேசத்தில் 10,000 பனம்விதைகள் நடும் வேலைத்திட்டம்  ஆரம்பித்து வைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவவேளைட்டத்தின் மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்பானை பிரதேசத்தில் யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி யானை மனித மோதலை குறைக்கும் பொருட்டு இருபதாயிரம் பனம் விதைகள் நடும் நிகழ்வு நேற்று நண்பகல் (05) திகதி 
மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள மற்றும் பொதுமக்கள் என பலரும் இணைந்து பனம் விதைகளை குறித்த பகுதியில் நடுகை செய்தனர்.