திருகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாணப் பாடசாலை மட்ட சதுரங்கப் போட்டியில், கல்முனை கார்மல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவன் , 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற பரமேஸ்வரன் கவிஷான் ஆறு போட்டிகளிலும் வெற்றிபெற்று மாகாணச் சம்பியன் பட்டத்தைத் தனதாக்கியுள்ளார்.
பாடசாலை சதுரங்கப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில், தனது அபாரமான ஆட்டத்திறன், சிந்தனைத் திறன் மற்றும் துல்லியமான நகர்த்தல்களால் எதிர்த்துப் போட்டியிட்ட வீரர்களை வெற்றிகொண்டு ஆறு போட்டிகளிலும் முழுமையான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
6 போட்டிகள் – 6 வெற்றிகள் – 6/6 புள்ளிகள் என்ற சிறப்பான அடைவுடன் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கிழக்கு மாகாணச் சதுரங்கச் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான பயிற்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் சதுரங்க விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வெளிப்பாடாக இந்தச் சாதனை அமைந்துள்ளது.
இவரது வெற்றிக்குப் பின்னால் வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர்கள், ஊக்கமளித்த ஆசிரியர்கள், குடும்பத்தினர் மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பரமேஸ்வரன் கவிஷானின் இந்தச் சாதனை மேலும் பல உயரங்களை எட்டுவதற்கான சிறந்த தொடக்கமாக அமையட்டும்!





