.jpeg)

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் 2025/2026 போட்டியில் தேசிய ரீதியாக தங்க விருது, 1ம், 2ம், மற்றும் 3ம் இடங்களை பெற்றுக்கொண்ட அரச திணைக்களங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வானது அதிமேதகு ஜனாதிபதி கௌரவ அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் பங்குபற்றுதலூடன்இன்று (08.11.2026) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது தேசிய ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டமைக்கான விருதினை பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர் பெற்றுக் கொண்டனர்.
இந்த சாதனையானது எமது உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு, அயராத உழைப்பு, குழு முயற்சி மற்றும் வினைத்திறனான அரச சேவைக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரம்!