
வெண்ணிற இரவுகள் நாவலை , நிலவோடும் இரவோடும் தான் இதுவரை படித்திருக்கிறோம்.
ஆனால் ரஸ்யாவில் “வெண்ணிற இரவுகள்” முற்றிலும் வேறொரு பருவ நிலையைச் சொல்கிறது.போனவருடம் தோழர் சி.மகேந்திரனின் நண்பர் தோழர் பாஸ்கர் அவர்களை அமெரிக்காவில் சந்தித்தோம், அவர் ரஸ்யாவில் வசிக்கிறார், அவரோடு நீண்ட நேரம் ரஸ்யா குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ரஸ்யாவின் வெண்ணிற இரவுகள் குறித்துச் சொன்னார்.
செய்ண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் ஒவ்வொரு ஜூன் மாதமும் இந்த வெண்ணிற இரவு அற்புதம் நிகழ்கிறது. அங்கு மே 15 முதல் ஜுலை 15 வரை 24 மணி நேரமும் சூரிய வெளிச்சம் இருக்கிறது.
சூரியன் மறைந்த பிறகு , நடு இரவுக்குப் பிறகு சூரிய வெளிச்சத்தில் வாணம் வெண்ணிறமாகக் காட்சியளிக்கிறது. இதுதான் உண்மையில் “வெண்ணிற இரவுகள்”.
இதையொட்டி பல திருவிழாக்கள் ரஸ்யாவில் இன்றும் நடைபெறுகிறது, இதைத்தான் மகத்தான எழுத்தாளர் தாஸ்தாயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகள் காவியாமாக்கியுள்ளார். இதைதெரிந்த பிறகு நாவலின் வண்ணமே மாறிவிட்டது. இயற்கையை மகத்தான படைப்பின் கருப்பொருளாக்கிய நாவலை இப்போது மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
தாஸ்தாயேவ்ஸ்கிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்..
ஆர்.ஆர்.சீனிவாசன்











