புதிய எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு இணங்க, பேருந்து கட்டணங்களை அதிகரிக்கும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்தது.
எனினும், குறித்த எரிபொருள் விலை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டு பேருந்து கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.





