வாழைச்சேனை பகுதியில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

 











































மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் வாழ்வாதார ரீதியாகவும் அன்றாட வாழ்க்கையிலும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்கள் மற்றும் அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

“வாழ்வின் உதயம்” அமைப்பு மற்றும் Lions Club of Batticaloa Lady Stars For Humanity ஆகிய அமைப்புகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இந்த மனிதாபிமானப் பணிக்கு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்முனை மாவட்ட மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பு ஆதரவளித்து இந்த உதவிகளை வழங்கி வைத்தது.

மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நம்பிக்கையையும் ஆதரவையும் ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட Director பிரசாந்தி சாமுவேல் ஜெயா, D. ஹரிசங்கர், R. தனுசன், H. துவேந்தினி, ஸ்டேபனி மகேசன் மற்றும் M. சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கருத்திற்கொண்டு எதிர்காலத்திலும் இவ்வாறான மனிதாபிமானப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேற் குறிப்பிட்ட நிகழ்வு கடந்த மாதம் 22-ம் திகதி முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .