மாமாங்கேஸ்வர் ஆலயத்தில் நுண்கலைத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய அரங்க விழாவில் ஆற்றுகை செய்யப்பட்ட மகிடிக்கூத்து ஆற்றுகை தனித்துவமான வடிவமைப்புடன் இடம்பெற்றது. இது நுண்கலைத்துறையின் தலைவர் துஷ்யந்தி சத்தியஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சு. சந்திரகுமார் அவர்களின் ‘ஆற்றுகை மையக் காற்றல்’ வெளிப்பாட்டுடன் இந்த வருட மகிடிக் கூத்தானது உருவானது. நுண்கடன், வெள்ளைக்காரன் வெள்ளைகாரி பாத்திரங்களை மையப்படுத்தி இவ்வருட மகிடி என்னால் பயிற்றுவிக்கப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டது இது பரீட்சார்த்தமாக வந்தாறுமூலை மகிடியின் பிரதான ஓட்டத்துடன் சீலாமுனை மகிடியில் வரும் ஓத முனியும், சந்திவெளி மகிடியில் குளவி குத்துவது, தேன் பூச்சி குத்துவது போன்ற நிகழ்வும், ஆரையம்பதி, கொக்குவில் மகிடியில் உள்ள வெள்ளைக்காரன் வெள்ளைக்காரி பாத்திரத்திங்களும் சேர்க்கப்பட்டன. புதிதளித்தலும், படைப்பாக்கமும் அங்கதத்துடன் இணைந்து இப்பயிற்சி கொடுக்கப்பட்டது. மகிடிக் கூத்தில் பங்குகொண்டு ஆற்றுகை செய்த கலைஞர்களாகப் பின்வருவோர் காணப்படுகின்றனர். பயிற்றுவிப்பாளாகவும் நடத்தினராகவும் கலாநிதி சு. சந்திரகுமார் செயற்பட்டார். உடையாராக செ.சஞ்சித்தும், விதானையாக செ.சரனியாவும், பொலிஸ்:ந.சியாமினி, போசடாமுனியாக இ.சஜித்தும், சிஷ்யனாக வீ.சௌமியாவும், காளமாமுனியாக உ.வானுப்பிரியாவும், கஞ்சாமுனியாக செ.திருவரசியும், காமாட்சியாக ர.ஜீவவர்சினியும், மீனாட்சியாக ஞா.பவித்திராவும், ஆதிக்குடிகளாக -க.டசிந்திரா, ர.ரஜிதா, த.தேவிகா போன்றோரும், நுண்கடணாக சு.எழில்ராஜ், மே.திலட்சனா போன்றோரும், வெள்ளைக்காரனாக இ.வினோதனும், வெள்ளைக்காரியாக ஜீ.கிறிஸ்டிலாவும், காளியாக சா. சோபிதாவும், பிராமணப் பிள்ளைகளாக ஜ.அக்ஸ்சயா, நா.நிதுஜா, இ.சஞ்சிதா, ச.சசிகலா போன்றோரும் ஆற்றுநராகச் செயற்பட்டனர்

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)




