மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 49 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஞ்சந்தொடுவாய் மஜீத் வீதியில் அமைந்துள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த திருமணமாகாத ஆண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பதில் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன் விசாரணைகளை மேற்கொண்டார்.
பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, சடலம் காணப்பட்ட இடத்திற்கு அருகில் தூக்குக்கயிறு ஒன்று காணப்பட்டதுடன், சடலத்தின் கழுத்துப் பகுதியில் குறித்த கயிற்றின் ஒரு பகுதியும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





