மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பல மில்லியன் பெறுமதி வாய்ந்த நன்கொடைளை பொருட்களாக வழங்கியது

 



 


 


 



































































மட்டக்களப்பு பாரம்பரிய லயன் கழகமும் இலங்கை அபேக்சா நன்கொடை நிறுவனமும் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பல மில்லியன் பெறுமதி வாய்ந்த நன்கொடைளை பொருட்களாக வழங்கியது

  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யின் புற்றுநோய் பிரிவுக்கு மட்டக்களப்பு பாரம்பரிய லயன் கழகம் மனிதநேய அடிப்படையில் இலங்கை அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து பல மில்லியன்  பெறுமதிவாய்ந்த பொருட்களை இனாமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (30) மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் ஆர் முரளீஸ்வரன் தலைமையில் அபேக்சா நிறுவனத்தின் தலைவர் லயன் எஸ்.கே குமார், மற்றும் அபேக்சா நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்கள் உ.தேவகுமார், எந்திரி.த.மயூரன் மற்றும் நி.அனிஸ்டன் அத்துடன் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 306 D10 ஆளுனர் லயன் ஷாகிர் அகமட், முன்னால் ஆளுனர் லயன் லோகேந்திரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்  இடம்பெற்றது  இவ்விழாவுக்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆர் முரளீஸ்வரன் தலைமை தாங்கியதோடு புற்றுநோய் வைத்திய பிரிவின் பொறுப்பாளரும் வைத்திய ஆலோசகருமான வைத்தியர் ஏ. இக்பால்  வரவேற்புரை நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து   நாள குழாய்களை கண்டுபிடிக்கும் இயந்திரம்  சிறுநீர் இழக்கி மருந்து வகைகள்  தண்ணீரை சுத்தப்படுத்தி வடிகட்டி குடிநீருக்குப் பாவிக்கும் பொறிமுறை கொண்ட இயந்திரங்கள்  சுவரில் மாட்டும் மின்விசிறிகள் சக்கர நாற்காலிகள் போன்ற பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. இன்னும் ஒரு விடயம் என்னவென்றால் புற்றுநோய் சிகிச்சைகளுக்காக வருகின்ற நோயாளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி இருந்து சிகிச்சை பெறும்  நோயாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில்  பால் தேனீரும் சிற்றுண்டிகளும் வழங்கி வருகின்றன இந்த நிகழ்வு இன்றைக்கு நூறாவது நிகழ்வாகும் இதுவும் ஒரு சிறப்பு  நிகழ்வின் இறுதியாக   புற்றுநோய் பிரிவு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் தமது வைத்திய பிரிவுக்கு அன்பளிப்பு செய்த அனைத்து நிறுவனங்களுக்கும்  நன்றியை  தெரிவித்தார் அத்தோடு குழந்தை புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வைத்தியசாலை, பாடசாலைகள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களிலும் இன்று வழங்கி வைக்கப்பட்டது