மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் அனுசரணையில் GLOBAL VISION CULTURAL AWARDS இன் சமூக சேவையாளர்களை கௌரவமளிக்கும் நிகழ்வு கடந்த 2026.06.20 மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளரும், சர்வதேச சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தின் (USA) இலங்கைக்கான பிரதிநிதியும், இலங்கை சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் (Kingdom Business), மட்டக்களப்பு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் பிரதான ஆலோசகருமான "தேசிய ஜோதி" சிவானந்ததாஸ் ரமணதாஸ் அவர்களுக்கு, மனிதாபிமான மனித உரிமைகள் மற்றும் குலோபல் விஷன் அமைப்பினால் அவரது 20 வருட சமூக சேவையினை கௌரவிக்கும் முகமாக "தேசபந்து" என்ற மரியாதைக்குரிய சமூக சேவைக்கான கௌரவ கலாநிதி பட்டம் (Doctorate of social work) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.






