மட்/மட் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் இணைந்துள்ள 65 மாணவர்களுக்கான அமோக வரவேற்பு 29.01.2026 ஆம் திகதி பாடசாலை முதல்வர் திரு அ.குலேந்திரராசா தலைமையில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
வலயக்கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள், அமைப்புக்களின் நிர்வாகிகள், கல்விச் சமூகத்தினர் என இன்னொரன்ன விருந்தினர்கள் பங்கு பற்றிய இந்நிகழ்விற்கு எழுத்தாளர் கதிரவன் ஆலோசகர் திரு தாந்தியன் சிதம்பரப்பிள்ளை முதன்மை விருந்தினராக பங்குபற்றி இருந்தார்.
இரண்டாம் தர மாணவர்களின் கலை நிகழ்வுகள், முதலாம் தர மாணவர்களுக்கான பரிசளிப்புகள் மற்றும் பெற்றோர்களுக்கான செயலுக்கங்கள் என்று முப்பெரும் விழாவாக இந்நிகழ்வை பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஒழுங்குப்படுத்தியிருந்தமை சிறப்பம்சமாகும்.





