கடந்த 2025ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 545 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை என்பதோடு, 231 முறைப்பாடுகள் கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பானவையாகும்.
மேலும் கடந்த வருடத்தில் 79 கட்டிளமைப் பருவ கர்ப்பங்கள் மற்றும் மூன்று கருக்கலைப்புகளை சபை பதிவு செய்துள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 38 பாலியல் வன்கொடுமை வழக்குகள், சிறுவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட 150 இணையவழி துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் 20 சிறுவர் உயிர்மாய்ப்புகள் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகள் தொடர்பாக 42 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இந்த புள்ளிவிபரங்கள் இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த தொடர்ச்சியான கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் இதுதொடர்பில் தொடர்ச்சியான விழிப்புணர்வின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன என சபை குறிப்பிட்டுள்ளது.





