காரைதீவு ஒன்றியம் - பிரித்தானியா அமைப்பினரால் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது.
இதன் போது அதிகளவு சேதத்திற்குள்ளான மலையக பிரதேசங்களான கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமையல் உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த நிவாரண பொருட்களானது காரைதீவு ஒன்றியம் - பிரித்தானியா (KAUK) அமைப்பினரால், பிரித்தானியாவில் வசிக்கின்ற காரைதீவு மக்களின் பங்களிப்புடன் இந்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், இவ் நிவாரண பொருட்கள் பகிந்தளிக்கும் நிகழ்வில் கண்டி மனித அபிவிருத்தி தாபன அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகையான உதவி திட்டங்கள் இவ் அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)



.jpeg)

.jpeg)
.jpeg)





