மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் பட்ஜெட் (Budget) வெற்றி.

 


ம.தெ.எ.பற்று பிரதேச சபையின் 07வது சபையமர்வு இன்றைய தினம் தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இன்றைய சபை அமர்வின் போது 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டபோது வாத பிரதிவாதங்களின் பின்பு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சபையில் இருந்த 20 உறுப்பினர்களில் 10உறுப்பினர்கள் ஆதாரவாகவும் 06 உறுப்பிளர்கள் நடுநிலையாகவும் நான்கு உறுப்பினர்கள் ஏதிராகவும் வாக்களித்திருந்தனர். இதில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலையாகவும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுயோட்சை குழு உள்ளடங்களாக 04 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்கழித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.