சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் ஓர் இயற்கை நீர் வீழ்ச்சி இலங்கையில் அதுவும் பூண்டுலோயாவில் அமைந்துள்ளது . அறிவீர்களா?
ஆம். இயற்கை எழில் கொஞ்சும் பூண்டுலோயாவில் உள்ள மனோரம்மியமான சூழலில் டன்சினன் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது.
அதனை "தூவானம் பீலி" என்று சொல்வார்கள்.
இது உலகப்பிரசித்தி பெற்றது.
இது நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை செயலாளர் பிரிவிலே இருக்கின்றது.
பூண்டுலோயாவிலேயே டன்சினன் தோட்டத்தையும், சீன் தோட்டத்தையும் பிரிக்கின்ற முக்கியமான இடத்திலே மனோரமியமான சூழலிலே இருக்கின்றது .
இங்கிருந்து
தான் பூண்டுலோயாவுக்கான ஒட்டுமொத்த நீர் வழங்கல் இடம்பெறுகின்றது. அதாவது
இந்த நீர்வீழ்ச்சியில் வருகின்ற நீர்தான் பூண்டுலோயாவிற்கு தேசிய நீர்
வழங்கல் வடிகாலமைப்பு சபை நீரை வழங்குகிறது .
பிரபல இந்திய நடிகர் தனுஷ் ஸ்ரீதேவி நடித்த இந்திய திரைப்படமான
"தேவதையை கண்டேன்" படம் இங்கு தான் படமாக்கப்பட்டது.
குறிப்பாக 'அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் ..." என்ற அழகிய பாடல் படமாக்கப்பட்டது இந்த டன்சினன் நீர்வீழ்ச்சியில் தான் .
அது
மாத்திரம் அல்ல ஆங்கில திரைப்படமான "மௌண்டன் இன்த யங்கிள்" ( Mountain in
the jungle"என்ற படத்தின் முதல் பாகம் படமாக்கப்பட்டதும் இதே
நீர்வீழ்ச்சயில் தான் .
இதைவிட இன்னும் ஒரு முக்கிய விடயம் எமது இலங்கை 100 ரூபாய் நாணயத்தாளிலே இந்த டன்ஸ்ஸின் நீர் வீழ்ச்சியின் படம் இருக்கின்றது.
எத்தனை பேர் அதை அறிவார்களோ தெரியவில்லை .சரி இப்போதாவது பார்த்துக் கொள்ளுங்கள் .
இந்த
டன்சினன் நீர்வீழ்ச்சிக்கு அணி சேர்த்தால் போல் அருகிலே ஒரு சிறு ஆலயம்
அமைந்திருக்கின்றது. சண்முகம் குருக்கள் பொறுப்பாக இருக்கிறார். நீர்
வீழ்ச்சியிலும் நடுவே தெய்வங்களின் சிலைகளும் இருக்கின்றன.
இவை
எல்லாம் இந்த நீர்வீழ்ச்சிக்கு அழகுசேர்க்கின்றன. கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கின்ற இந்த நீர் வீழ்ச்சி 24 மணி நேரமும் சதா சலசலவென்று சத்தம்
கேட்டுக் கொண்டேயிருக்கும்.
அங்கே பாறைகளில்
பாய்கின்ற நீர்வீழ்ச்சியிலே எழுகின்ற நீர்ச்சாரல்கள் அந்தப்பிரதேசம்
எங்கும் தூவானம் போல பரந்து காட்சியளிக்கின்றது. அதனால் தான் இதனை தூவானம்
பீலி என்கிறார்கள்.
வெளிநாட்டவர்களையும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளையும் சுண்டி இழுக்கின்ற அந்த பீலியை ஒருதரம் சென்று பாருங்கள். அசந்து போவீர்கள்.
நேரடி ரிப்போர்ட்.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்









