நாட்டின் அபிவிருத்திக்கு உதவி செய்யக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கு சிறந்த கல்வித் திட்டம் ஒன்று அவசியம் என்று கல்வி, உயர்கல்வி, தொழில்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் வாசனா எதிரிசூரிய தெரிவித்தார்.
புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படுவது மட்டும் போதாது. இது போன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன.
புதிய கல்வி திட்டம் ஐந்து முக்கிய தூண்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
விடயதான தரப்பு, மனிதவள அபிவிருத்தி, மதிப்பீட்டு அணுகுமுறை, நிர்வாக மாற்றம், ஊடகம் மற்றும் மக்களை அறிவுறுத்தும் விடயங்கள் என்ற ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.
அடுத்த வருடம் ஆறாம் தரத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அங்கு அடிப்படை பிரிவுக்காக கலை மற்றும் சுகாதார பாடங்களும் அறிமுகப்படுத்தப்படும். இரட்டைப் பாடப்பிரிவுக்காக மூன்று பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று திருமதி எதிரிசூரிய தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம், வாழ்க்கைக்கான தொழில்நுட்பம், தொழில் முயற்சி மற்றும் அடிப்படை தத்துவம் போன்ற பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதற்காக ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்திருப்பதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்தார்.





