கடும் பாதிப்புக்குள்ளான கம்பளையில் ஒஸ்கார் உதவிகள் மூவினமக்களுக்கும் வழங்கிவைப்பு!

 














 அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளையில்  வாழும் மூவின மக்களுக்கும்  ஒரு தொகுதி பேரிடர் நிவாரண பொருட்களை நேற்று (16)  வழங்கி வைத்தது.

இந்நிகழ்வு கம்பளை யில் வாழும் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபர் பி.கணேசன்  தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது .
ஒஸ்காரின் காரைதீவு மக்கள் பூரண அனுசரணை வழங்கியிருந்தனர்.

ஒஸ்கார்  தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான  குழுவினரின் பூரண ஒத்துழைப்பில் பேரிடர் நிவாரண திட்டத்தின் முதற்கட்டமாக ஏலவே பொலனறுவை கல்எல கிராமத்திற்கு முதல் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அடுத்து கண்டி கந்தானையில் வழங்கி வைக்கப்பட்டது.

 ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா தலைமையிலான குழுவினர் அவற்றை வழங்கி வைத்தனர்.

 ஒஸ்கார் சார்பில் வி.ஜெயச்சந்திரன்,  வி.தஸானந்த்,  என். அமரீசன் மற்றும் ஓய்வு நிலை அதிபர் பூ.நவரெத்தினராஜா ஆகியோர் தொண்டர்களாக கலந்து கொண்டனர்.

இதனை ஒஸ்கார் அமைப்பின் சமூக சேவைக்கான இணைப்பாளர் பொருளாளர் வீ. விவேகானந்தமூர்த்தி மற்றும் செயலாளர் தி.லாவண்யன் ஆகியோர் அவுஸ்திரேலியாவிலிருந்து  ஒழுங்கமைப்பு செய்து ஏற்பாடு செய்திருந்தனர். 
 
 (கம்பளையில் இருந்து  வி.ரி .சகாதேவராஜா)