நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் மூன்று வீடுகளில் ஒரு வீடு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குகிறது .

 


நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 
 
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அத்துடன், பசி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
சுமார் மூன்று வீடுகளில் ஒரு வீடு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
அதேநேரம், பல குடும்பங்கள் உணவைக் குறைப்பது போன்ற உத்திகளை நாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.