பண்டிகைக் காலத்தில் போலி
நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக குற்றப்புலனாய்வு
திணைக்களத்தினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை
தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பணத்தைக் கையாளும் போது
போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு
காவல்துறை ஊடகப் பேச்சாளர், எஃப்.யூ. வூட்லர் கோரியுள்ளார்.
பண்டிகைக் காலத்தின் போது, பெரும்பாலும்
5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களே புழக்கத்தில் இருப்பதாக அவர்
குறிப்பிட்டுள்ளார். முன்னதாகவும், இதுபோன்று நாணயத்தாள்கள்
புழக்கத்திலிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், போலி நாணயத்தாள்கள்
தொடர்பான அனைத்து சம்பவங்களையும் அருகிலுள்ள காவல் நிலையத்தில்
முறையிடுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர், எஃப்.யூ. வூட்லர் பொதுமக்களை
வலியுறுத்தியுள்ளார்.





