2026 ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறை நாட்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன .

 


 

2026ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரச அச்சுத் திணைக்களம் அடுத்த ஆண்டிற்கான உத்தியோகபூர்வ நாட்காட்டியை வெளியிட்டுள்ளது.

அடுத்த வருடத்தில் 26 அரச விடுமுறை நாட்கள் உள்ள நிலையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் அதிக எண்ணிக்கையிலான விடுமுறை நாட்களைக் கொண்ட மாதங்களாகத் தனித்து நிற்கின்றன.

அந்தவகையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மொத்தம் எட்டு விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன.

2026 விடுமுறை நாட்காட்டியின் சிறப்பம்சங்களாக சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 14, 2026 அன்று வருகிறதுடன் வெசாக் பௌர்ணமி போயா தினம் மே 1, 2026 அன்று சர்வதேச தொழிலாளர் தினத்துடன் இணைந்து வருகிறது.

டிசம்பர் 25, 2026 கிறிஸ்துமஸ் தினம் வெள்ளிக்கிழமை வருவதால் இது நீடிக்கப்பட்ட விடுமுறை வார இறுதிக்கான வாய்ப்பை வழங்குகிறது.


இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் முழு பட்டியல் பின்வருமாறு அமைகின்றது.

ஜனவரி 03 சனிக்கிழமை - துருத்து பௌர்ணமி போயா தினம்

ஜனவரி 15 வியாழக்கிழமை - தமிழ் தைப் பொங்கல் தினம்

பிப்ரவரி 01 ஞாயிற்றுக்கிழமை - நவம் பௌர்ணமி போயா தினம்

பிப்ரவரி 04 புதன்கிழமை - சுதந்திர தினம்

பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை - மகா சிவராத்திரி தினம்

மார்ச் 02 திங்கட்கிழமை - மெதின் பௌர்ணமி போயா தினம்

மார்ச் 21 சனிக்கிழமை - ஈத்-உல்-பித்ர் (ரமலான் பண்டிகை தினம்)

ஏப்ரல் 01 புதன்கிழமை - பக் பௌர்ணமி போயா தினம்

ஏப்ரல் 03 வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி

ஏப்ரல் 13 திங்கட்கிழமை - சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய நாள்

ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை - சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம்

மே 01 வெள்ளிக்கிழமை - வெசாக் பௌர்ணமி போயா தினம்

மே 01  வெள்ளிக்கிழமை - சர்வதேச தொழிலாளர் தினம்

மே 02 சனிக்கிழமை - வெசாக் பௌர்ணமி போயா தினத்திற்கு அடுத்த நாள்

மே 28 வியாழக்கிழமை - ஈத் அல்-அதா (ஹஜ் பண்டிகை நாள்)

மே 30 சனிக்கிழமை - அதி போசன் பௌர்ணமி போயா தினம்

ஜூன் 29 திங்கட்கிழமை - போசன் பௌர்ணமி போயா தினம்

ஜூலை 29 புதன்கிழமை - எசல பௌர்ணமி போயா தினம்

ஓகஸ்ட் 26 புதன்கிழமை - மிலாதுன் நபி (நபி முஹம்மதுவின் பிறந்தநாள்)

ஓகஸ்ட் 27 வியாழக்கிழமை - நிகினி பௌர்ணமி போயா தினம்

செப்டம்பர் 26 சனிக்கிழமை - பினார பௌர்ணமி போயா தினம்

ஒக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை - வப் பௌர்ணமி போயா தினம்

நவம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை - தீபாவளி பண்டிகை தினம்

நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை - இளை பௌர்ணமி போயா தினம்

டிசம்பர் 23 புதன்கிழமை - உந்துவப் பௌர்ணமி போயா தினம்

டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை - கிறிஸ்துமஸ் தினம்

இதேவேளை, இந்த திகதிகள் அஞ்சல், சுங்கம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் உட்பட அனைத்து துறைகளிலும் அரச விடுமுறை நாட்களாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பௌர்ணமி போயா விடுமுறைகள் போயா குழுவால் அங்கீகரிக்கப்பட்டதுடன் இந்த நாட்கள் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் அரச விடுமுறை நாட்கள் என்று திணைக்களம் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.