புளியந்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கான சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
புளியந்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கான சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் துதீஸ்வரன் தலைமையில் புளியந்தீவு மருதடி வாசிகசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான சமூக பொலிஸ் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜே.நிஜாம்டீன் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு குழுவிற்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் பீ. மதி உள்ளிட்ட குறித்த பகுதிக்கு பொறுப்பான அரச உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது புளியந்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் போதைப் பெருளை ஒழித்தல், புளியந்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவின் அபிவிருத்தி, சிறுவர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான பல்வேறுபட்ட விடையங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களை தெளிவுபடுத்தி விழிப்புணர்வூட்டப்பட்டதுடன், குறித்த பகுதியில் அதிகரித்து காணப்படும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் அதற்கான நடவடிக்கையினை பொலிஸ் திணைக்களம் விரைவுபடுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோளை முன்வைத்ததன் அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து வருகைதந்திருந்த அதிகாரிகளிடம் சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகர உறுப்பினருமான துதீஸ்வரன் குறித்த விடையம் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், குறித்த விடையம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி விரைவாக தீர்வினை பெற்றுத்தர வேண்டுமென இதன் போது தெரிவித்திருந்தார்.