சுவாமி. விபுலானந்தர் அவர்களால் 01.05.1929 அன்று கல்விப் பணியும் 26.11.1929 அன்று இராமகிருஸ்ணமிசன் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்ட பொக்கிச அடையாளமாகவும பல ஆயிரக்கணக்கான நற்பிரஜைகள் உருவாக அத்திவாரம் இட்டு கொடுத்த நமது
சிவாநந்தா பாடசாலை ஆரம்ப கட்டிடத்தை பாதுகாக்கும் நோக்கில் திருத்தப்பணிகள் சுவாமி. நீலமாதவானந்தஜி மகராஜ் அவர்களின் திருக்கரத்தால் ஆரம்பிக்கப்பட்டது பெரும் ஆசியாக அமைந்துள்ளது.
இவ் ஆரம்ப கட்டிடம் கிழக்கின் ஒரு அடையாளமாக திகழ்வதுடன் மிசன் துறவிகளினதும் சுவாமி விபுலானந்தர் அவர்களினதும் காலடி பதித்த ஆசி பெற்ற இடமாக ஒளி வீசும் புனித இடமாக பிரகாசிக்கும் இக் கட்டிடத்தை பாடசாலை அபிவிருத்தி குழுவும் பழைய மாணவர் சங்கமும் இணைந்து பாதுகாக்க முன் வந்ததை உலகளாவிய ரீதியில் வாழும் சிவானந்தியன்களும் அதன் அபிமானிகளும் பெரு மகிழ்வடைவதுடன் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
ஆலய தர்மகர்த்தா K.O வேலுப்பிள்ளை அவர்களால் சுவாமி. விபுவானந்தர் அவர்கள் கல்லடி பிரதேசத்துக்கு அழைத்து வரப்பட்டு அவருக்கு சொந்தமான 01 ஏக்கர் நிலத்தில் 26.11.1925 அன்று சுவாமி. விபுலானந்தர் அவர்களின் திருக்கரத்தால் அடிக்கல் நடப்பட்டு 25.04.1928 அன்று ஆலய தர்மகர்த்தா அவர்களால் சுவாமி. விபுலானந்தர் மூலம் இராமகிருஸ்ண மிசனுக்கு இவ் ஆரம்ப கட்டிடம் கையளிக்கப்பட்டது.
அன்றைய தினம் ; 15 ஏக்கர் நிலமும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சைவப்பள்ளி (தற்போதைய விவேகானந்தா மகளிர் கல்லூரி) அபிவிருத்திக்காக அப் பாடசாலை ஸ்தாபகர்களான கதிர்காமத்தம்பி உடையார் சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரால் வைப்பிலிடப்பட்டிருந்த ஐயாயிரம் ரூபாய்களும் சாசனம் மூலம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.