கஞ்சா பயிரிடுவதால் நாட்டிற்க்கு எந்த தீங்கும் ஏற்படாது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கூறினார்.
முதலீட்டு சபையின் பூரண கண்காணிப்பின் கீழ் கஞ்சா பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் நாட்டிற்க்குள் பாவனைக்காக செல்லாது என கூறிய பிரதி அமைச்சர் அந்த பொறுப்பையும் முதலீட்டு சபை கண்காணிக்க வேண்டும் என கூறினார்.
கஞ்சா பயிரிட்ட பின்னர் அவை அப்படியே ஏற்றுமதி செய்யப்படாது என கூறிய அவர் அதனை பதப்படுத்திய பின்னர் அது ஏற்றுமதி செய்யப்படும் என கூறினார்.
கஞ்சா பயிரிடுவது நல்லதா ? கெட்டதா ? என்று பார்ப்பதை விட இது வர்த்தக வலையத்தின் உள்ளே தான் பயிரிடப்படும்.பயிரிடப்பட்ட கஞ்சா பதப்படுத்தப்பட்டு பெறுமதி சேர்க்கப்பட்டே ஏற்றுமதி செய்யப்படும்