உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கில் இடம் பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்.





 



ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலிற்கு அமைவாக உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் விழிப்புணர்வு ஊர்வலம் 06.06.2025  இடம் பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடை பவனியில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி,மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.கோபாலப்பிள்ளை பங்குபற்றுதலுடன் நடைபெற்றன.

வவுணதீவு இலங்கை வங்கிக்கிளையின் முன்றலில் இருந்து ஆரம்பிக்கப் பட்ட நடை பவனியானது, வவுணதீவு உழவர் சந்தியை அடைந்து அங்கு மட்/மமே/கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்களால் 'பிளாத்திக்கு மாசுபாட்டை முறியடிப்போம்' எனும் தொனிப்பொருளில் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது

உலக சுற்றாடல்  தினத்தினை  முன்னிட்டு  சுற்றாடலை தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் பிளாஸ்டிக் பாவனை யினை குறைத்தல் போன்ற விழிப்புணர்வு செயற்பாடுகள் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில்  இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர் எஸ்.கோகுலன், கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.ஷாஹீட், மண்முனை வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி கே.பி. விஜயந்த, வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி  பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வரதன்