மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களை அறிவிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் முதல் அமர்வானது நேற்றைய தினம் பிற்பகல் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் இந்த சபை அமர்வு நடைபெற்றது.
இன்றைய சபை அமர்வினை பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
இதன்போது சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தவிசாளர் மேனன்,உபதவிசாளர் தங்கராசா கஜசீலன் உட்பட உறுப்பினர்கள் பிரதேசசபையின் உறுப்பினர்கள்,இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன் கட்சிகளின் முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டனர்.