யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று (05) வரை 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த புதைகுழியில் இரண்டாம் கட்டமாக 4 ஆவது நாளாக நேற்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, மேலும் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டன.