வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து, பெண்னொருவரின் சடலம் வியாழக்கிழமை (15) அன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி 1 ஆம் வட்டாரம் பஸார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்னொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.