சிறு போக வேளாண்மை செய்கையில் விவசாயிகள் மிகவும் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 





 

 

விவசாய அமைச்சினால்  விவசாயிகளுக்கு  பல மானிய திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டதை அடுத்து இம்முறை சிறு போக வேளாண்மை செய்கையில் விவசாயிகள் மிகவும் உற்சாகத்துடன் ஈடுபட்டு    வருகின்றனர்.

விவசாய அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகளுக்கு  பல மானிய திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டதை அடுத்து இம்முறை சிறு போக வேளாண்மை செய்கையில் விவசாயிகள் மிகவும் உற்சாகத்துடன் ஈடுபட்டு இருப்பதை காணக்கூடியதாக உள்ளது
இதேவேளை படுவான் கரைப் பகுதியிலும் தற்போது நிலவும் காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் சிறு போக வேளாண்மைக்கான   ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு இருப்பதை காணக் கூடியதாக உள்ளது

 கொக்கட்டிச்சோலை மண்டபத்தடி   வெள்ளாவளி மண்டூர் பழுகாமம் ஆகிய சமநல சேவை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் வரம்பு கட்டுதல் விதைப்புக்கு  ஏற்றவாறு வயல் நிலங்களை பண்படுத்துதல்  விதை  நெல் எறிதல் போன்ற விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது
அரசாங்கத்தினால் உர மானியம் விதைநெல் என்பன விவசாயி களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படும் என விவசாய அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 கம நல சேவை பிரிவுகளிலும் இம்முறை 38 ஆயிரம் ஏக்கர் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட உள்ளத்துடன்

விவசாய அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்காக அமைய இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 கம நல சேவை பிரிவுகளிலும் இம்முறை 38 ஆயிரம் ஏக்கர் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட உள்ளத்துடன்   
 அவற்றிற்கான நீர் முகாமைத்துவம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு காப்புறுதி என்பனவும் இம்முறை நடைமுறை ப்படுத்தப்பட உள்ளமை இங்கு குறிப்பிட த்தக்கதாகும்