உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது .
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின் போது குண்டுத் தாக்குதல் இடம் பெற்று ஆறு வருடங்கள் நிறைவை குறித்து அரசாங்கத்தினால் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களுக்கும் இன்று விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று காலை உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு சகல கிறிஸ்தவ தேவ ஆலய சுற்று வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.
இந்தப் பாதுகாப்பு பணிகளில் முப்படையினரும் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் சிறப்பு நடமாடும் பாதுகாப்பு பிரிவினரும் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன்
ஆலயத்திற்குள் வரும் சகல பக்தர்களும் கண்காணிக்கப்பட்டு ஆலய நிர்வாகத்தினரின் வழி நடத்தலின் கீழ் உள் செல்ல அனுமதிக்கப் பட்டிருந்தனர். இதேவேளை மாவட்டத்தில் இன்று விசேட பாதுகாப்பு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
சம்பவத்தை நேரில் கண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் வலி தெரியும் வழியில் இருந்து கதைப்பவர்களுக்கு விளங்காது , உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் கண்ட பாதிக்கப்பட்ட தாயின் வலி
சம்பவத்தை நேரில் கண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் வலி தெரியும் வழியில் இருந்து கதைப்பவர்களுக்கு விளங்காது கடந்த கால ஜனாதிபதிகள் எம்மை ஏமாற்றி விட்டனர் ஆறு வருடங்கள் கடந்தும் நமக்கான தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை இதனை நடத்தியவர்கள் எங்களுக்கான உரிய பதிலை வழங்க வேண்டும் என
மட்டக்களப்பு தாண்டவன் வெளியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தாயான திருமதி எஸ் ஆரோக்கியம் என்பவர் இன்று குண்டுவெடிப்பு இடம் பெற்ற சீயோன் தேவாலயத்திற்கு ஆறாவது ஆண்டு நினைவஞ்சலிக்கு வந்த போது ஊடகங்களிடம் தமது அனுபவத்தை இவ்வாறு தெரிவித்தார்.
வரதன்