ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின்படியே இது இடம்பெற்றுள்ளது.

இதன்படி, மேலதிக விசாரணைக்காக இது தொடர்பான அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.