முழு நாடும் எதிர்பார்க்கும் மிக முக்கியமான சம்பவங்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்..
ஆனால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாகவும் எச்சரிக்கையாகவும் செய்ய வேண்டும் என்று கூறினார்.
சில தகவல்கள் மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை எனவும், விசாரணைகள் மிக சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியினால் பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு தழுவிய ரீதியில் மிக முக்கியமான விசாரணையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நான் இன்று எமது பொலிஸ் அமைச்சரிடம் தெரிவித்தேன்.ஆனால் விசாரணையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மிக நுணுக்கமாகவும் கவனமாகவும் செய்ய வேண்டும்.
நாங்கள் விசாரணைகளை சிறப்பாக செய்து வருகிறோம். என்னால் அதை உறுதிப்படுத்த முடியும்.வாய் திறக்காதவர்கள் வாய் திறக்க ஆரம்பித்துவிட்டனர். சாட்சி சொல்ல பயந்தவர்கள் சாட்சி சொல்ல ஆரம்பித்துவிட்டனர். தொடர்பில்லை என்று சொன்னவர்களின் தொடர்புகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
எனவே, விசாரணைகள் சிறப்பாக நடத்தப்படுகிறன.இந்த நாட்டில் எந்தவொரு குற்றமும் காலத்தின் மணலில் புதைக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் குடிமக்களுக்கு நியாயம் செய்வோம் என்றும் உறுதியளிக்கிறோம்.
சற்று தாமதமாகும். நாம் மனதில் கொண்டுள்ள இலக்குகளை வைத்து கைது செய்ய முடியாது. நீதிமன்றத்திற்குச் சென்று அவர்களை குற்றவாளியாக்க நல்ல ஆதாரங்கள் வேண்டும்.எனவே, இதற்கு சிறிது நேரம் எடுக்கும், ஆனால் எவ்வளவு நேரம் எடுத்தாலும் சரியானதைச் செய்ய எங்கள் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.