மட்டக்களப்பு-திருமலை வீதியில் புல்லாவி சந்தியில் இடபெற்ற விபத்தில் 40
வயதுடைய மக்களடி வீதி, வாழைச்சேனையைச்சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான
சலீம் றபாய்தீன் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாகையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
ஓட்டமாவடியிலிருந்து மீன்
கொள்வனவுக்காக மோட்டார் சைக்கிளில் மாங்கேணி நோக்கிச்செல்லும் போது
மட்டக்களப்பு நோக்கி வந்த கந்தாளாயைச்சேர்ந்த பஸ் வண்டி மோதியே குறித்த
விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்றவுடன் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
விபத்து பற்றிய விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மரண விசாரணைகளின் பின்னர் ஜனாஷா உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
ந குகதர்சன்