பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் தெரிவிக்கையில்,
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வரும் ஆசிரியை ஒருவரே இவ்வாறு பொலிஸ் வாகனங்களில் பயணித்துள்ளார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் திரைப்பட காட்சிகளுக்காக தனியார் நிகழ்ச்சிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் வாகனங்கள் வாடகைக்கு வழங்கப்படும்.
இவ்வாறு தரம் 5 புலமைப்பரிசிலுடன் தொடர்புடைய தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலரின் கோரிக்கைக்கு இணங்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் வாகனங்கள் சில அண்மையில் வாடகைக்கு வழங்கப்பட்டன.
இதன்போது ஆசிரியை ஒருவர் தனிப்பட்ட பிம்பத்தை உருவாக்குவதற்காக பொலிஸ் வாகனங்களில் பயணிப்பதை காணொளிகளாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
எனவே, தனிப்பட்ட தேவைக்காகவும் பணத்துக்காகவும் தனி நபர்களுக்கு பொலிஸ் வாகனங்கள் வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.