மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் உஷ்ணமான கால நிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது நகரில் முக்கிய தேவைகளுக்காக வரும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்
அதிக உஷ்ணம் காரணமாக வயோதிபர்கள் நோயாளிகள் பெண்கள் சிறுவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்மர நிழல்களில் ஒதுங்கி இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.
சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுமக்கள் நண்பகல் வேலைகளில் வழியில் நடமாட வேணாமென தெரிவித்திருந்த போதும் அதிகமான மக்கள் நகரில் தங்களது தேவைகளை நிமித்தம் வருகை தந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது
தற்போது மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணமான கால நிலையினால் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளது இதே வேளை மாவட்டத்தில் பயன் தரும் வாழை மா தெங்கு பயிர்ச்செய்கையும் அதிக உஷ்ணம் காரணமாக பாதிப்படைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்னை மரங்களின் இலைகள் கருகுவதுடன் அதன் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது இதனால் தேங்காயின் விலைகளும் அதிகரித்து உள்ளது.
வரதன்