இரண்டாவது முறையாக ஆரையூர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஆரையம்பதி கடற்கரையில் இடம்பெற்ற மாபெரும் பட்டத் திருவிழா.

 























வசந்தகால சித்திரை வருடத்தை முன்னிட்டு இரண்டாவது முறையாக ஆரையூர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்   19,04. 2025 சனிக்கிழமை நேற்றைய தினம்  ஆரையம்பதி கடற்கரையில் வெகு கோலாகலமா பட்டத் திருவிழா இடம்பெற்றது. மாபெரும் பட்டத் திருவிழாவை ஆரையூர் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

 
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு  இட.ங்களில் இருந்தும் வட மாகாணத்தில் இருந்தும் 37  போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பட்டத் திருவிழாவில்  சமயக் கலாச்சாரங்களை மதிக்கின்ற வகையில் நான்கு மதங்களையும் அடையாளப்படுத்தி, ஆரையம்பதியின், வரலாற்று சின்னங்களை கலை நயத்தோடு வடிவமைத்து போட்டியின் சுயாதீன நடுவர்கள் முன்னிலையில் போட்டியாளர்கள்  பட்டத்தினை பறக்க விட்டிருந்தனர்.

வசந்த காலச் சித்திரை வருடத்தினை  முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குடும்பங்களோடு பட்ட திருவிழாவினை கண்டுகளிக்க வருகை தந்திருந்தனர்.

போட்டியில் முதலாம் இடம் (40,000), இரண்டாம் இடம்(,20,000) மூன்றாம் இடம் (10,000)இடத்தினை வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு  ஆரையூர் விளையாட்டு கழகத்தினால் பரிசு பணத் தொகை வழங்கி வைக்கப்பட்டது.