மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளுக்காக ஆறாவது ஆண்டு நினைவஞ்சலி ஆராதனைகள் உயிரிழந்த உறவுகளின் உறவினர் இன்று கண்ணீர் மல்க தமது வழிபாடுகளில் கலந்து கொண்டதை காணக் கூடியதாக இருந்தது
மட்டக்களப்பு பிள்ளையார் அடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் வழிபாடு ஆராதனைகள் ஆலய பிரதம போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் இன்று இடம் பெற்றது
இதன் போது கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இதே தினத்தில் குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் இதன் போது பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் விசேட நினைவஞ்சலி ஆராதனைகள் இடம் பெற்றதுடன்
ஆலய வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இருந்ததுகுண்டு வெடித்த சீயோன் தேவாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் உருவப்படங்கள் அஞ்சலிக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன இந்த ஆராதனை வழிபாடுகளில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
வரதன்