2019.04.21 அன்று இடம் பெற்ற உயித்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளின் 6ம் ஆண்டு நினைவாக 21.04.2025 இன்று #உதிரம்_சிந்தி_உயிர்_நீத்த_எம்_உறவுகளுக்கு_உதிரம்_கொண்டு_செலுத்தும்_அஞ்சலி எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் S. சுஜீவா தலைமையிலும், மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்ப்பாட்டிலும், இளைஞர் சேவை அதிகாரியும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தருமாகிய A. தயாசீலன் அவர்களின் வழிகாட்டளின் கீழ் இவ் இரத்த தான முகாமானது தாண்டவன் வெளி மாதா கோவில் அருகில் அமைந்துள்ள பேடினன்ஸ் மண்டபத்தில் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி, மற்றும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோத்தர் மாணிக்கபோடி சசிகுமார் மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் திரு M. ரம்ஷி தொடர்ந்து, பல இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்யும் உன்னத பணியில் ஈடுபட்திருந்தனர்.
இதன் போது இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சான்றிதழ்களை ஏற்பாடு செய்த AIM For DREAM அமைப்பின் I.செந்தூரன் அவர்களுட்கும் அவருக்கு பங்களிப்பு வழங்கிய முன்னால் பிரதேச சம்மேளன தலைவர் S.லவண்ராஜ் அவர்களுட்கும் சிற்றண்டிகளை வழங்கிய முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் ஜெயராசா பயஸ்ராஜ் அவர்களுட்கும் , மரக்கன்றுகளை வழங்கிய Studio Jk உரிமையாளருக்கும், மெழுகுவர்த்திகளை வழங்கிய செல்வி கௌசல்யா அவர்களுட்கும் , அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளகின்றோம்.