மட்டக்களப்பு சத்துரு கொண்டான் பிரதேசத்தில் உள்ள விழிப்புணர்வு மற்றும் பெயர் பதாதைகள் இனம் தெரியாத சமூக விரோதிகளினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு திருமலை வீதி அருகில் அமைந்துள்ள லங்கா மாதா வீதியில் உள்ள பெயர் பதாதையும் இருவிழிப்பணர்வுப் பதாதைகளும் சமுகப் பொறுப்புணர்ச்சியற்றவர்களால் சிதைக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி இப் பிரதேச மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.