மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான தயானந்தன் அவர்கள் புதிதாக இலங்கை தமிழ் தேசிய கட்சி ஒன்றினை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வு மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் தயானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 10 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போது கட்சியை செயலாளராக நாயகம் தயானந்தன் கருத்து தெரிவிக்கையில்........
கடந்த காலத்தில் தாயக மண்ணில் யுத்தத்தால் உயிர்நீத்த அப்பாவி பொதுமக்களை நினைவு கூர்ந்து இங்கு கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு கிராங்குளம் மண்ணில் கொட்டும் மழையிலும் இந்த ஈகைதச்சுடர் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்றி வைக்கப்படுகின்றது.
அத்தோடு இன்றைய இந்த நிகழ்வானது தமிழ் பேசும் மக்கள் பரந்து வாழும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் எங்கும் முரசு கொட்டும் நாளே கார்த்திகை 26 நாளைய தலைமுறைக்கான அரசியல் பாதையில் ஒரு விடியலே.
இலங்கை தமிழ் தேசிய கட்சி தாயகத்திலும் புலத்திலும் உள்ள எமது உறவுகளின் வழிகாட்டலும் சர்வதேசத்தில் உள்ள புத்திஜீவிகள் ஆர்வலர்கள் மற்றும் இலட்சிய கனவு சுமந்து நாளைய இளம் தலைமுறைகளுக்கு ஒரு பாரிய சர்வதேச வலை பின்னலுடன் இலட்சிய தாகம் சுமந்து ஜனநாயக வழியில் மக்கள் ஆணையுடன் அரசியல் வேட்க்கையுடன் இப்புனித கார்த்திகை மாதத்தில் கடந்த ஐந்து வருடங்களாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழ் தேசிய கட்சியை மக்கள் ஆணையுடன் முன்னெடுப்போம் என்பதை இந்த இடத்தில் ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றோம்.
இலங்கை தமிழ் தேசிய கட்சியானது எங்களுடைய கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் உரிமை சார்ந்த விடயங்கள் அத்தோடு அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக அதாவது கல்வி சுகாதாரம் ஏனைய காணி பிரச்சனைகள் எமது மாவட்டத்திலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் கூடுதலாக பரவிக் கொண்டிருக்கின்றது அதனை நாங்கள் எங்களுடைய தமிழ் தேசிய கட்சியினூடாக முன்னெடுப்பதற்கு எங்களுடைய மக்கள் ஆணையுடன் நிச்சயமாக எதிர்காலத்தில் சிறந்த முறையில் நாங்கள் முன்னெடுக்க எத்தனித்திருக்கின்றோம்.