FREELANCER
நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் - பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .
.
பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சிங்கராஜா இனியன் மற்றும் வைத்திய அதிகாரிகள் , தாதியர்கள் , பணியாளர்கள் கலந்து கொண்டதோடு பிரதேச வாழ் பொது மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர் ..
இவ் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
நோயாளர்களுக்கு தேவையான அறிவுரைகளும் , ஆலோசனைகளும் , நோய்களைப்பற்றிய விளக்கங்களும் மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் .