மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இயங்கி வரும் லியாகஃபே (LIYA CAFE) உணவகத்தின் ஓராண்டு நிறைவு.






 











    (கல்லடி செய்தியாளர்)

 



மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இயங்கி வரும் லியாகஃபே உணவகம் தனது முதலாவது வருடப் பூர்த்தியினை அண்மையில் வெகு விமர்சையாகக் கொண்டாடியது.

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எந்திரி எல்.சித்திராதேவி,பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.எம்.ஏ.கே.பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனது முதல் வருட பூர்த்தியினை முன்னிட்டு சிறுவர்கள் மற்றும் இளையவர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன்,அதில்  வெற்றியீட்டியோருக்குப்  பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தங்களது இரவுப்பொழுதை மகிழ்ச்சியாக முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.