மட்டக்களப்பு திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய வனவாச நிகழ்வு.










(கல்லடி செய்தியாளர்)


 

 

திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய வனவாச நிகழ்வு இன்று புதன்கிழமை (24) ஆலய வளாகத்தில் அமைந்துள்ள வாள் மாற்றும் அரங்கில் இடம்பெற்றது.

இதனைக் காண மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாலய உற்சவம் மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஏழு நாட்கள் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இவ்வாலய உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை  (19) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி,நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (26) இடம்பெறவுள்ள தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..