சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட மட்டு. பொண்டுகள்சேனை பாலம் தற்காலிகமாகப் புனரமைப்பு.





 

   



(கல்லடி செய்தியாளர்)

 

 



மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் பொண்டுகள்சேனைக் கிராமத்தில் அமைந்துள்ள பாலம் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையால் கிறவல் இடப்பட்டுத் தற்காலிகமாகப் புனரமைப்புச் செய்யப்படுகிறது.

இப்பாலம் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதனால் இப்பாலமூடாகப் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இப்பாலம் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்குப் பொண்டுகள்சேனைப் பொதுமக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.