ஆசிரியர் சமூகம் பின்தங்கிய பிரதேசங்களில் அர்ப்பணிப்புடன் ஆற்றிய பணி தான் முழு இலங்கையுமே மட்டக்களப்பை திருப்பிப் பார்க்க வைத்தது - ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

 



 வரதன்  

 



 

 சிறுபான்மை சமூகம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னுக்கு வருமாகவே இருந்தால் இந்த நாட்டை மட்டுமல்ல உலகத்தையே அவர்கள் ஆளலாம். கல்வித்துறையிலே பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளன அப்போதுதான் நாம் வளர்முக நாடுகளுக்கு இணையாக செல்ல முடியும்


 கிழக்கு மாகாணம் அண்மையிலே வெளிவந்த தேசிய பரீட்சை முடிவுகளில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது இவை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும் ஆகவே

 கடந்த காலங்களில் மின்சார வசதி இல்லாத போதும் மட்டக்களப்பு மாவட்டம் தேசிய ரீதியில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. கல்குடா மற்றும் மண்முனை மேற்கு கல்வி வளையங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்த போதும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி இவ்வாறான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. என.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்  ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
ஜனாதிபதி  இன்று  கல்விக்காக நாட்டில் பல  வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் அவை பாராட்டுக்குரியவை மின்சார வசதி இல்லாத பொருளாதார நெருக்கடியான காலகட்டத்திலும் ஆசிரியர் சமூகம் பின்தங்கிய பிரதேசங்களில் அர்ப்பணிப்புடன் ஆற்றிய பணி தான் முழு இலங்கைக்குமே மட்டக்களப்பை திருப்பிப் பார்க்கும் அளவுக்கு இவ்வாறான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன- ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்