உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடாக சிங்கப்பூர் தெரிவாகி உள்ளது

 

 


 

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், உலகின் முக்கிய நாடுகளான ஐக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பட்டியலில் பின்வாங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதனடிப்படையில், இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான இடங்கள் உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட்டியலில் வெளியாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்தியர்கள் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் உலகளவில் பயணத் தகவல்களை சேமித்து வருகின்றது. இதனடிப்படையில், இந்தியாவின் தற்போதைய தரவரிசை செனகல் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவின் கடவுச்சீட்டு 82ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பான் இரண்டாவது இடத்திதை பிடித்துள்ளது.

தொடர்ந்து, தரவரிசையில் மூன்றாவது இடத்தில், ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளதுடன், மேற்குறித்த அனைத்து நாடுகளும் 191 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற்றுள்ளன.

நியூசிலாந்து, நோர்வே, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றுடன் ஐக்கிய இராச்சியம் நான்காவது இடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியாவும் போர்த்துகலும் 5ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டடுள்ளன. அதே சமயம் அமெரிக்கா எட்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 192 நாடுகளுக்கு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இன்றி வருகைதரும் விசேட சலுகையை வழங்குவதுடன் பட்டியலின் படி 195 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகியுள்ளமையும் விசேட அம்சமாகும்.