பாடகர் விழாவில் இலங்கையை சேர்ந்த 25 இளம் போட்டியாளர்கள் 17 தங்கப் பதக்கங்களையும் 8 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

 


 

  பாலி  சர்வதேச பாடகர் விழாவில் இலங்கை சோல் சவுண்ட்ஸ் அகடமியைச் சேர்ந்த 25 இளம் போட்டியாளர்கள் 17 தங்கப் பதக்கங்களையும் 8 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தனித்தனி போட்டியாளர்களாக இந்த பதக்கங்களை வென்றுள்ளனர்.

இவர்களுக்கு இசையமைப்பாளர் சௌந்தரி டேவிட் ரோட்ரிகோ மற்றும் குரல் பயிற்சியாளர்களான ஷிவந்தி சுப்ரமணியம் மற்றும் ஷெனுக் விஜேசிங்க ஆகியோர் பயிற்சியளித்தனர்.

13 வது பாலி சர்வதேச பாடகர் விழாவில், போட்டியாளர்கள் சிறுவர் மற்றும் இளைஞர் தனிப் பிரிவுகளில் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.