புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி வேலைத்திட்டம் பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது -2024.06.25 |

 


 





 


 


 மட்டக்களப்பு  பழைய  மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற 82 கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி வேலைத்திட்டம் ஜீன் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்போது புதிதாக நியமனம் பெறும் கிராம உத்தியோகத்தர்கள் எவ்வாறான விடயங்களை அறிந்திருக்க வேண்டும் என்பது தொடர்பிலான விடயங்கள் செயலமர்வுகளாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள்,திணைக்களத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  (25) காணி தொடர்பான விடயங்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வாக இடம்பெற்றது. இச் செயலமர்வின் வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் கலந்து கொண்டு காணி தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இச்செயலமர்வு எதிர்வரும் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது  குறிப்பிடத்தக்கது